- உத்திரமேரூர்
- சாலவாக்கம் ஊராட்சி
- காஞ்சிபுரம் கலெக்டர்
- காஞ்சிபுரம்
- கலெக்டர்
- கலாச்செல்வி மோகன்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- தமிழ்நாடு…
காஞ்சிபுரம், டிச.17: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், சாலவாக்கம் என ஊராட்சி ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டதில் ஊர்களின் விபரத்தில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சிறப்பு அரசிதழ் நாள் 08.12.2025ன்படி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 73 கிராம ஊராட்சிகளை இரண்டாக பிரித்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும், சாலவாக்கம் என்ற ஊராட்சி ஒன்றியத்தை புதியதாக உருவாக்கி, அதில் 35 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இரண்டு ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கலாம் என உத்தேசிக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்ய அறிவிக்கை தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன், விவரம் பின்வருமாறு: ஆதவப்பாக்கம், அகரம்தூளிஅழிசூர், அம்மையப்பநல்லூர், அரசாணிமங்கலம், அத்தியூர் மேல்தூளி, இளநகர், அனுமந்தண்டலம், கடல்மங்களம், களியாம்பூண்டி, கம்மாளம்பூண்டி, காரனை, காரியமங்கலம் கருவேப்பம்பூண்டி, கட்டியாம்பந்தல், காவாம்பயிர், காவனூர்புதுச்சேரி, மானாம்பதி, மானாம்பதி கண்டிகை, மருதம், மருத்துவம்பாடி, மேல்பாக்கம், மேனலூர், நாஞ்சிபுரம், ஒட்டந்தாங்கல், ஒழுகரை, பென்னலூர், பெருநகர், பெருங்கோழி, புலிவாய், புலியூர், இராவத்தநல்லூர், சிலாம்பாக்கம், தளவராம்பூண்டி, தண்டரை, திணையாம்பூண்டி, திருப்புலிவனம், விசூர் ஆகிய கிராமங்கள் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியுள்ளன.
இதேபோல், ஆனம்பாக்கம், அன்னாத்தூர், அரும்புலியூர், சின்னாலம்பாடி, எடமிச்சி, எடையம்புதூர், களியப்பேட்டை காட்டாங்குளம், காவித்தண்டலம், கிளக்காடி, குண்ணவாக்கம், குருமஞ்சேரி, மதூர், மலையாங்குளம், நெய்யாடிவாக்கம், ஒரக்காட்டுப்பேட்டை, ஒழையூர், பாலேஸ்வரம் பழவேரி, பினாயூர், பொற்பந்தல், புலிப்பாக்கம், புல்லம்பாக்கம், ரெட்டமங்கலம், சாலவாக்கம், சாத்தனஞ்சேரி, சிறுதாமூர், சிறுமையிலூர், சிறுபினாயூர், சித்தனக்காவூர், திருமுக்கூடல், திருவானைக்கோயில், தோட்டநாவல், வாடாதவூர், வயலக்காவூர் ஆகிய கிராமங்கள் சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியுள்ளன.
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம் என இரண்டாக பிரித்து, மறுசீரமைப்பு செய்வது குறித்து அந்த உள்ளூர் வட்டாரப் பகுதி மக்கள் அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து 6 வாரங்களுக்குள் மறுப்பினை தெரிவிக்க விரும்பினால் எழுத்து மூலம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். காலக்கெடுவுக்குள் மறுப்பு ஏதும் பெறப்பட்டால், அதனை அரசு உரிய பரிசீலனை செய்யும். மறுப்புகள் ஏதும் இருப்பின் அதனை எழுத்து மூலமாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரியிட்டு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
