அம்பத்தூர், டிச.17: அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் நேற்று முன்தினம் லாரி ஒன்று சந்தேகப்படும்படி நேற்று முன்தினம் இரவு அந்த பகுதி முழுவதும் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை உளவுத்துறை போலீசார், அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த லாரியை பிடித்து சோதனை செய்த போது, 15 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர்கள் மகாராஜன், விஜய் மற்றும் உதவியாளர்கள் மற்றொரு மகாராஜன், ரமேஷ், புவிராஜன் ஆகிய 5 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அம்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து வாங்கப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திராவில் உள்ள அரிசி ஆலைகளுக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.
