×

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி கண்ணாடிகள் உடைப்பு

விருத்தாசலம், டிச. 15: சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்தே பாரத் ரயில் தினமும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும்-தாழநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே மாலை 6 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இது குறித்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததுடன் விரைந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என விசாரணை செய்தனர்.

விசாரணையில், அப்பகுதியில் சிறுவர்கள் சிலர் நின்று கொண்டு இருந்ததாகவும் சிறுவர்கள்தான் கல் வீசி தாக்கி உள்ளதாகவும் தெரிய வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசார், ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

 

Tags : Bharat ,Virudhachalam ,Chennai ,Tirunelveli ,Virudhachalam railway ,Thazhanallur ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்