சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி


சென்னை: சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பண்டிகை அனைவராலும் மிகவும் பக்தியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடப்படுவதாகும். தமிழ்நாட்டில் இவ்விழா நவராத்திரி என்ற பெயரிலும், கர்நாடத்தில் தசரா என்ற பெயரிலும், மேற்கு வங்கத்திலும், வட இந்தியாவின் பிறப்பகுதிகளிலும் துர்கா பூஜை என்ற பெயரிலும் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பூம்புகார் என்று புகழ் பெற்று விளங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகள வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் கொலுபொம்மைகள் கண்காட்சி என்ற சிறப்பான தொரு கண்காட்சியினை நடத்திவருகிறது. இந்த ஆண்டும் சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டைப் போன்றே நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை 24.09.2023 முதல் 26.10.2023 முடிய (ஞாயிறு உட்பட) தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நவராத்திரி கொலு கண்காட்சியில் களிமண் காகிதக்கூழ். பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண். சுடுகளிமண் (Terracotta) ஆகிய பொருட்களைக் கொண்டு கடவுள் மற்றும் தெய்வ உருவங்கள்.

விளக்குகளின் உருவங்கள் மற்றும் திருவிழா தொகுப்பு பொம்மைகள், தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் பார்வைக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் தசாவதாரம்செட், இராமாயணசெட், அஷ்டலட்சுமிசெட், விநாயகர். பேரன், திருமலை. கோபியர் நடனம். தர்பார். கிரிக்கெட் விளையாட்டு, சங்கீத மும்மூர்த்திகள்வைகுண்டம், மாயாபஜார், கார்த்திகைபெண்கள், தெய்வாணைத்திருமணம் செட், எலிநடனம் செட், ஞானப்பழம் செட் கோப்பியர் நடனம் செட், கோவர்த்தனகிரி செட், குபேரன் செட், கபாலீஸ்வரர் செட், காதணி செட், லஷ்மி சரஸ்வதிசெட். மாயாபஜார் செட், திருமணம் செட், பிரகலாதன் செட், ராமர் பட்டாபிஷேகம் செட், சத்தியநாராயண செட், திருப்பார்கடல்செட்,

வளைகாப்பு செட், வரவேற்புசெட், வசுதேவர் செட் போன்ற கருத்து சார்ந்த சிறப்பான கொலு பொம்மைகள் காட்சிக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் ஆந்திராபிரதேசத்தின் கொண்டப்பள்ளி, சென்னைப்பட்டனா மற்றும் எட்டிக்குப்பாமர பொம்மைகள், கர்நாடகம், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் கொலு பொம்மைகள் தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் பலவித கொலு பொம்மைகளுடன் கூடுதலாக மேலும் பலவிதமான பரிசு பொருட்கள் மற்றும் புதுமையான கலைப்பொருட்களில் சந்தன மரப்பொருட்கள், வெண்மரப் பொருட்கள், நூக்கமர பொருட்கள், பித்தளை பொருட்கள், பித்தனை விளக்குகள், பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் கலைதட்டுகள் மற்றும் ஓவியங்கள், பலவகையான துணிவகைகள், பழங்குடிகைவினைப்பொருட்கள், கண் கவரும் விதமாக பொதுமக்கள் பார்வைக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து கொலுபொம்மைகளுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வங்கி அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

இக்கண்காட்சியில் சென்னை மாநகர மக்கள் வாங்குவதன் மூலம் தங்கள் இல்லத்திற்கு அழகு கூட்டுவதுடன் இக்கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் அதிக அளவிலான கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் உதவுவதால் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் தங்களது பத்திரிகை, தொலைக்காட்சியின் மூலம் இக்கண்காட்சி குறித்த செய்தியினை வெளியிட்டு உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இக்கண்காட்சியில் குறைந்தபட்சம் ரூ.50/ மதிப்புள்ள கொலு பொம்மைகளும் அதிகபட்சம் ரூ.125,000/ மதிப்புள்ள கொலுபொம்மைகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி மூலம் ரூ.1 கோடி விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: