×

தேசிய குடிமை பணிகள் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசிய குடிமை பணிகள் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: தேசிய குடிமை பணிகள் நாளில், நமது மக்களாட்சியை வலுப்படுத்த அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் உறுதிப்பாடு மிக்க குடிமை பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஆட்சியியல் கொள்கைக்கும் மக்களுக்கும் இடையேயான முக்கிய தொடர்பு கண்ணியாக விளங்கும் குடிமைப்பணி அலுவலர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் தொலைநோக்கினை தாக்கமிகுந்த செயல்பாடாக களத்தில் மாற்றிக் காட்டுபவர்கள் ஆவர். சமத்துவம், செயல்திறன், இரக்கம் ஆகியவற்றுடன் அனைத்து குடிமக்களையும் அவர்களுக்குரிய மாண்புடன் அணுகும் ஆட்சி நிர்வாகத்தினை உறுதிசெய்ய தமிழ்நாடு உழைக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தேசிய குடிமை பணிகள் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,National Civil Services Day ,Chennai ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்