தேசிய வருவாய் வழி உதவித்தொகை அரசு பள்ளி மாணவர்கள் மூவர் தேர்வு

பேராவூரணி, ஏப்.18: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெற அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் தேர்வாகி உள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் படிப்பை மேலும் ஊக்குவிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி பேராவூரணி அருகே உள்ள துலுக்கவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி கனிஷ்கா, மாணவர்கள் பிரேம்குமார், செல்வநீலகண்டன் ஆகிய மூவரும், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம், 9, 10, 11, 12ம் வகுப்பு வரை என, 4 வருடங்களுக்கு ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகை யாக வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், ஆசிரியர்கள் தமிழரசன், மணிமேகலை, ரவிச்சந்திரன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் செல்வமணி, பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

The post தேசிய வருவாய் வழி உதவித்தொகை அரசு பள்ளி மாணவர்கள் மூவர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: