கல்வி உதவித்தொகை தொடர்பாக சந்திக்க சென்ற தனது மகளை தனி அறைக்கு அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாயார் பிப்.2ம் தேதி புகார் அளித்தார். இந்த வழக்கை சிஐடி விசாரணைக்கு கர்நாடக அரசு மாற்றியது. இந்நிலையில் தற்போது சிறுமியின் தாயார் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண், சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக தெரியவருகிறது. இவர் எடியூரப்பாவை சந்திக்க நாளை நேரம் கேட்டிருந்ததாகவும், தற்போது அவர் மரணமடைந்துள்ளதால் இதில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் வழக்கறிஞர் பாலன் தெரிவித்துள்ளார். பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post எடியூரப்பா மீது பாலியல் புகாரளித்த சிறுமியின் தாய் மரணம்: பிரேத பரிசோதனை செய்ய வக்கீல் கோரிக்கை appeared first on Dinakaran.