ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டரை தாண்டியது: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

நாகர்கோவில்: தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், ‘தமிழ்நாடு முதல்வரின் கனிவான வழிகாட்டுதலில் கடும் வறட்சியிலும் 31 லட்சத்தை தாண்டியது ஆவின் பால் கொள்முதல். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நன்றி.

கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஆவின் ஒரு நிலையான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்குவோம், முதல்வரின் தொலைநோக்கு பார்வையான வெண்மை புரட்சியை ஏற்படுத்துவோம். விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார்.

The post ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டரை தாண்டியது: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: