மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103.35 அடியாக ஜூன் 12ம் தேதி இருந்ததால் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கும் என கணக்கிடப்பட்டு அணையிலிருந்து குறுவைசாகுபடிக்காக 12 ஆயிரம் கன அடி நீர் முதல்வரால் திறக்கப்பட்டது.

இதையடுத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் டெல்டா பாசன மாவட்டங்களில் நடவு பணி தீவிரமடைந்ததால் கூடுதல் நீர் தேவைப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து அதிகபட்சமாக 13 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 200 கன அடிக்கும் கீழாக சொற்ப அளவிலே நீர்வரத்து உள்ளது. இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதாலும், நீர்வரத்து குறைவாக இருப்பதாலும், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைத்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 23 நாட்களில் சுமார் 17 அடியளவில் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு குறுவைசாகுபடிக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பாசன தேவைகளை பூர்த்திப்படுத்த தமிழ்நாடு அரசும், நீர்வளத்துறை அதிகாரிகளும் டெல்டா விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக குறைப்பு appeared first on Dinakaran.

Related Stories: