மருத்துவ சுற்றுலா மூலம் ₹60,000 கோடி வருவாய்

கொல்கத்தா: இந்தியா மருத்துவ சுற்றுலா மூலம் ரூ.60 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இந்திய மருத்துவர்களின் அபார செயல்திறன், இந்தியாவில் கிடைக்கும் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகள், குறைந்த செலவில் சிறந்த மருத்துவம், எளிதில் கிடைக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் காரணமாக வௌிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவில் மருத்துவம் பெற விரும்புகின்றனர். மருத்துவத்துக்காக இந்தியாவுக்கு வௌிநாட்டினர் வருவது மருத்துவ சுற்றுலா என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு வௌிநாட்டினர் வருகை அதிகரித்துள்ளதால் இந்தியாவின் மருத்துவத்துறையின் வருமானம் கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ சுற்றுலா மூலம் இந்தியாவுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவ சுற்றுலா வருமானத்தை மேலும் அதிகரிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய சுகாதாரத்துறையில் பல தனியார் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மருத்துவ சுற்றுலா மூலம் ₹60,000 கோடி வருவாய் appeared first on Dinakaran.

Related Stories: