மயிலாடுதுறையில் ஆடவர் கால்பந்து போட்டி

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாநில அளவிலான ஆடவர் கால்பந்தாட்ட போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்று மயிலாடுதுறை அணியும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் மோதிய இறுதி போட்டியில் மயிலாடுதுறை அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. முதல் நான்கு இடத்தை பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான ஆடவர் கால்பந்தாட்ட போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. சக்தி நினைவு கால்பந்து கழகம் மற்றும் மயிலை கால்பந்து கழகம் இணைந்து நடத்திய போட்டியில் மயிலாடுதுறை சென்னை, கோயம்புத்தூர் திருச்சி, மதுரை, சேலம், காரைக்கால் மற்றும் கேரளாவில் இருந்து ஒரு அணி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன.

நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த 28ம் தேதி முதல் 3 தினங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டிக்கு மயிலாடுதுறை மயிலை கால்பந்து கழக அணியும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நேற்று பரபரப்பாக நடைபெற்றது. இதில் மயிலை கால்பந்து கழகம் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதலிடம் பிடித்த மயிலாடுதுறை அணிக்கு வெற்றிகோப்பை ரூ.30 ஆயிரம் ரொக்க தொகையும், இரண்டாமிடம் பெற்ற திருச்சி செயின்ட்ஜோசப் அணிக்கு வெற்றிகோப்பை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கதொகை வழங்கப்பட்டன. மேலும் அரையிறுதி போட்டியில் விளையாடி 3-ம் இடம்பிடித்த காரைக்கால் அணி, 4-ம் இடம் பிடித்த சென்னை சிடானி எஃப்சி அணிக்கு கோப்பைகளும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.

The post மயிலாடுதுறையில் ஆடவர் கால்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: