பெண்களை இழிவுபடுத்திய சம்பவவம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இம்பால் : மணிப்பூரில் பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக குக்கி -மெய்தி சமூகத்தினர் இடையே நடந்து வரும் கலவரம் இன்னும் ஓயவில்லை. இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த மே 4ம் தேதி குக்கி இன பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இளைஞர்கள் அழைத்துச் சென்றனர். அவர்களை வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான குய்ரம் ஹெராதாஸ்(32) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கிட்டத்தட்ட 77 நாட்களுக்கு பின்னர், இந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மேலும் சில பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,”மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும்.இதுபோன்ற இழிசெயலை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என பதிவிட்டுள்ளார்.

The post பெண்களை இழிவுபடுத்திய சம்பவவம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் : எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: