கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேர் கைது

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த சிவகுமார் என்ற முக்கிய குற்றவாளியை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீஸ் கைது செய்தது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர்கள் சக்திவேல் மற்றும் மீன் வியாபாரி கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதேஷ்க்கு மெத்தனால் கடத்த உதவியதாக சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் வரை 40 போின் உடல்கள் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 18-ந்தேதி நள்ளிரவு முதல் 100-க்கும் மேற்பட்டோா் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்துள்ளனர். இதில் 19-ந்தேதி அதிகாலை முதல் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 19-ந்தேதி சிகிச்சை பலனின்றி 17 பேரும், 20-ந்தேதி சிகிச்சை பலனின்றி 24 பேரும், நேற்று முன்தினம் 9 பேரும் மொத்தம் 50 போ் உயிாிழந்தனா். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பவர்களில் தினசரி சிலர் மரணத்தை தழுவி வருகிறார்கள். அந்த விதத்தில் நேற்று மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்னர்.

இதன் மூலம் விஷ சாராயம் குடித்து உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 57ஆக உயா்ந்துள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகாிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தொிகிறது. மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 57 போ் உயிாிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மட்டுமல்லாது, தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உள்பட மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: