மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு; ரயில்வே சேவைகளுக்கு விலக்கு: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

டெல்லி: மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மலா சீதாராமன்; மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும். 90 நாட்கள் தங்க வேண்டும்; மாத வாடகை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்க கூடாது.

அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும். எஃகு, அலுமினியம், இரும்பு, உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்கப்படும். அட்டை பெட்டிகளுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும். சோலார் குக்கர்கள், நீர் தெளிக்கும் ஸ்ப்ரிங்கிளர் இயந்திரங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும். பொருட்களை வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகன சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும்.

நடைமேடை பயணச்சீட்டு உள்ளிட்டவற்றிற்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஜிஎஸ்டி ஆர் 4 விண்ணப்பத்தை நீட்டிப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

The post மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு; ரயில்வே சேவைகளுக்கு விலக்கு: நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: