மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் மோடியும், அம்மாநில முதலமைச்சருமே முழு பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

சென்னை: மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், அம்மாநில முதலமைச்சருமே முழு பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு விளையட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிட நேரிடும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து மணிப்பூர் கொடூர சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யபடதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுரை 4 பேர் கைது செய்யபட்டதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், அம்மாநில முதலமைச்சருமே முழு பொறுப்பேற்க வேண்டும். 3 மாதங்களுக்கு பின்னர்தான் மணிப்பூர் கலவரம் பற்றி வாய் திறக்க பிரதமருக்கு மனம் வந்துள்ளது என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்லும் வீடியோவை நான் பார்க்கவில்லை, அதை பார்க்ககூடிய மன தைரியம் எனக்கு இல்லை என அமைச்சர் உதயநிதி கூறினார்

The post மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் மோடியும், அம்மாநில முதலமைச்சருமே முழு பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: