மம்தா இந்தியா கூட்டணியில் நீடிக்கிறார் திரிணாமுலுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: ராகுல் காந்தி தகவல்

கும்லா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 42 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. இதை ஏற்க காங்கிரஸ் மறுத்ததால் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இதன்ஒரு பகுதியாக ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் பார்சியாவில் அவரது யாத்திரை நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கம். காங்கிரஸ், திரிணாமுல் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து நிதீஷ் குமார் மட்டுமே வௌியேறி பாஜவில் இணைந்துள்ளார். அவர் வௌியேறியதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பீகாரில் இந்தியா கூட்டணியினர் தொடர்ந்து போராடுவோம்” என்று கூறினார்.

 

The post மம்தா இந்தியா கூட்டணியில் நீடிக்கிறார் திரிணாமுலுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: ராகுல் காந்தி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: