டெல்லி: நடப்பு மற்றும் 17வது மக்களவையை கலைக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மக்களவையைக் கலைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.