ஜூனில் குறைவான பருவமழை

புதுடெல்லி: ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட குறைவான பருவமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறையின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவானந்த பாய் கூறுகையில்,‘‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூனில் இயல்பை விட குறைவான பருவ மழை பெய்யக்கூடும். தென் தீபகற்பத்தின் சில பகுதிகள், வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யக்கூடும். பசிபிக் பெருங்கடலின் வெப்பமயமாதல் காரணமாக தென்மேற்கு பருவமழை இந்த பருவத்தில் வழக்கம்போல் இருக்கும்.” என்றார்.

The post ஜூனில் குறைவான பருவமழை appeared first on Dinakaran.

Related Stories: