குலசேகரம்-கல்லடிமாமூடு ‘குப்பை இல்லா குமரி’ விழிப்புணர்வு நடைபயணம்: அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு

குலசேகரம்: குமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வீடுகளில் உறிஞ்சி குழி திட்டம், கழிவுகளை குழாய் வழி உரமாக்கல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இவைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று குப்பை இல்லா குமரியாக மாற்றுவதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதே போன்று நேற்று குப்பை இல்லா குமரி என்ற விழிப்புணர்வு நடைபயணம் குலசேகரத்தில் நடைபெற்றது.

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் காலை 7 மணிக்கு நடைபயணம் தொடங்கியது. இதனை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்து வைத்து வழி நடத்தி சென்றார். சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். நடைபயணம் குலசேகரம் அரசு மருத்துவமனை சாலை, அரசுமூடு, செட்டிதெரு, காவல்ஸ்தலம், குலசேகரம் சந்தை, செருப்பாலூர், தெங்குவிளை, இட்டகவேலி, புலியிறங்கி வழியாக கல்லடிமாமூடு சந்திப்பில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜாண்சன், குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், செயல் அலுவலர் எட்வின் ஜோஸ்,திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, ஊராட்சி தலைவர்கள் விமலா சுரேஷ், சலேட் கிறிஸ்டோபர், குமரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்ஜெபா ஜாண், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வர்கீஸ், மாவட்ட பிரதிநிதிகள் பெர்ஜின், பொன் ஜேம்ஸ், சதீஷ், மாவட்ட அணி நிர்வாகிகள் ஜே.எம்.ஆர், சுரேஷ், ஜஸ்டின் பால் ராஜ்,யோபு, அமல் ராஜ், வக்கீல் கிளாஸ்டின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நடைபயணத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், சமூக அமைப்புகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையிலும் குப்பை இல்லா குமரி என்ற கோசத்துடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண்ணம் நடந்து சென்றனர். நடைபயண பாதையில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த உறிஞ்சு குழி திட்டங்களை அமைச்சர் மனோதங்கராஜ் பார்வையிட்டார்.

The post குலசேகரம்-கல்லடிமாமூடு ‘குப்பை இல்லா குமரி’ விழிப்புணர்வு நடைபயணம்: அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: