பெங்களூரு: கர்நாடக மாநில 16வது சட்ட பேரவை முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி மூன்று நாள் நடைபெறுகிறது. முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் ஆர்வி தேஷ்பாண்டே உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மே 24ம் தேதி, சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுள்ள நிலையில் அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க வசதியாக சட்டப்பேரவை இன்று முதல் 3 நாட்கள் கூடுகிறது. தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ தேஷ்பாண்டே பொறுப்பேற்று எம்எல்ஏக்களுக்கு பதவிபிரமாணம் செய்துவைக்கிறார். இதையடுத்து மே 24ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. இதில் நிரந்தர சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். மேலும் அமைச்சரவையில் காலியிடங்களையும் மே 24க்குள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
The post கர்நாடக பேரவை இன்று கூடுகிறது: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர் appeared first on Dinakaran.