கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி அலுவலர்கள் செயல்பட வேண்டும்

*மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கோரிக்கை மனுக்கள் விவரம், பதிவேற்றம் மற்றும் தீர்வு, துறை வாரியாக அனுப்பப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரம், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள், முடிவற்ற திட்ட பணிகள், நலத்திட்ட உதவிகள், துறை வாரியான சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது துறை வாரியாக செயல்படுத்தப்படும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும், வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், துறை வாரியான செயல்பாடுகளை தொடர்ந்து முறையாக மேற்கொள்ளவும், இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி துறை சார்ந்த அலுவலர்கள் செயல்படவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி அலுவலர்கள் செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: