ஜோகூர் சுல்தான் கோப்பை ஹாக்கி: இன்று அரையிறுதியில் இந்தியா

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் நகரில் சர்வதேச அளவிலான 11வது ஜோகூர் சுல்தான் இளையோர் ஹாக்கிப் போட்டி நடக்கிறது. அதில் பி பிரிவில் களம் கண்ட நடப்பு சாம்பியன் இந்திய அணி லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்து, மலேசியா அணிகளுடன் மோதியது. அதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அடுத்த 2 ஆட்டங்களில் மலேசியோவை 3-1, நியூசிலாந்தை 6-2 என்ற கோல் கணக்குகளில் வீழ்த்தியது.

லீக் சுற்றின் முடிவில் தலா 2வெற்றி, தலா ஒரு டிரா செய்ததால் கோல்கள் அடிப்படையில் பி பிரிவில் இந்தியா , பாகிஸ்தான், ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகள் முதல் 2 இடங்களை பிடித்தன. எனவே இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா-ஜெர்மனி , 2வது அரையிறுதியில் ஆஸி-பாக் ஆகியவை பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் இந்தியா -ஜெர்மனி அணிகள் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் இந்தியா 6-5 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. ஜோகூர் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா 10வது முறையாகவும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனி 2வது முறையாகவும் முன்னேறி உள்ளன. எனவே இன்று நடைபெறும் அரையிறுதியிலும் நடப்பு சாம்பியன் இந்தியா வெற்றிப் பெற்று 8முறையாக பைனலுக்கு முன்னேறும், கூடவே 4வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே உள்ளது.

The post ஜோகூர் சுல்தான் கோப்பை ஹாக்கி: இன்று அரையிறுதியில் இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: