ஐஎஸ்எல் கால்பந்து செப்.13ல் தொடக்கம்: முகமதன் அணி அறிமுகம்

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 11வது சீசன் செப்.13ல் தொடங்குகிறது. ஐஎஸ்எல் தொடரின் இந்த ஆண்டுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது (செப்.13 – டிச.30). மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெறும்போது, முதல் ஆட்டம் மாலை 5.00 மணிக்கு தொடங்கும். கொல்கத்தாவில் நடைபறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் எஸ்ஜி, முன்னாள் சாம்பியன் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.

இந்த முறை புதிதாக கொல்கத்தாவின் புகழ்பெற்ற முகமதன் ஸ்போர்டிங் கிளப் 13வது அணியாக அறிமுகமாகிறது. முகமதன் எஸ்சி அணி தனது முதல் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியை எதிர்கொள்கிறது (செப்.16). மோகன்பகான் எஸ்ஜி (ஏடிகே), ஈஸ்ட் பெங்கால் எப்சி அணிகளை தொடர்ந்து முகமதன் அணிக்கான ஆட்டங்களும் கொல்கத்தா நகரில் நடக்கும். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் ஒடிஷா எப்சியை எதிர்கொள்கிறது (செப்.14).

சென்னை களத்துக்கான முதல் ஆட்டம் செப்.26ம் தேதி நடைபெறும். அதில் சென்னை – முகமதன் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தலா 24 ஆட்டங்களில் விளையாட உள்ள நிலையில், முதல் கட்டமாக தலா 13, 14 ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. எஞ்சிய ஆட்டங்களுக்கான அட்டவணை, தேசிய அணியின் சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ப வெளியாகும். முதல் அட்டவணையிலும் அக்.6-16 வரை இடைவெளி விடப்பட்டுள்ளது. அக்.12ம் தேதி ஆசிய அளவிலான குழு போட்டியில் இந்தியா – லெபனான் மோதுகின்றன.

The post ஐஎஸ்எல் கால்பந்து செப்.13ல் தொடக்கம்: முகமதன் அணி அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: