* சென்னை டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7.00 மணி முதல் சேப்பாக்கம் ஸ்டேடிய வளாகத்தில் வாங்கலாம்.
* துலீப் கோப்பையின் கடைசி சுற்று போட்டிகள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இன்று தொடங்கிறது. இந்தியா ஏ,பி,சி,டி என 4 அணிகள் தலா 2 ஆட்டங்களில் விளையாடி உள்ளதில் சி,பி,ஏ முதல் 3 இடங்களில் முறையே 9, 7, 6 புள்ளிகளுடன் உள்ளன. டி அணி 2 ஆட்டங்களிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.
* இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்கள் செப்.19, 21, 24, 27 தேதிகளில் நடைபெறும். ஏற்கனவே நடந்தடி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.
* 632 நாள் இடைவெளிக்குப் பிறகு ரிஷப் பன்ட் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.