சேலம் மாநகரத்தில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக கணேசன் கடந்த 2 ஆண்டிற்கு மேல் பணியாற்றினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சேலம் மாநகர கடும் குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில், லஞ்ச புகார் தொடர்பாக உண்மை தன்மை கண்டறியப்பட்டு, அதற்கான அறிக்கை உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை விசாரித்த உள்துறை செயலாளர் அமுதா, இன்ஸ்பெக்டர் கணேசனை அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, அதற்குரிய ஆணையை இன்ஸ்பெக்டரிடம் நேற்று வழங்கினார். சேலம் மாநகர போலீசில் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டது போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ, எஸ்எஸ்ஐ ஏட்டு சஸ்பெண்ட்
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் நான்கு வழிச்சாலையில் உள்ள ஒரு சோதனை சாவடியில் பணியில் உள்ள போலீஸ்காரர் ஒருவர், டாரஸ் லாரி டிரைவரிடம் ரூ.100 லஞ்சம் வாங்கி புத்தகத்திற்கு அடியில் மறைத்து வைக்கும் காட்சி, டாரஸ் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கும் போலீஸ் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்த லஞ்ச புகாரில் ஆரல்வாய்மொழி எஸ்.ஐ. ஜாண் போஸ்கோ, சிறப்பு எஸ்ஐ பேச்சிநாத பிள்ளை, ஏட்டு தர்மராஜ் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.
The post லஞ்சப் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.
