இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்: போட்டி அட்டவணையை வெளியிட இந்திய கிரிக்கெட் வாரியம்!

மும்பை: இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று, விளையாடவுள்ள நிலையில், தற்பொழுது போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருந்தது. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பினர். இதனை தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடவுள்ளது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5, 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12 முதல் 16 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20 முதல் 24 வரையும் நடக்கிறது.

ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. டி20 போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி டெஸ்ட் போட்டிகள் இரவு 7.30 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் இரவு 7 மணிக்கும், 20 ஓவர் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்: போட்டி அட்டவணையை வெளியிட இந்திய கிரிக்கெட் வாரியம்! appeared first on Dinakaran.

Related Stories: