இந்திய அணி அச்சமின்றி விளையாடும்…

இங்கிலாந்து அணியுடனான மகளிர் டி20 தொடரில் இந்திய வீராங்கனைகள் அச்சமின்றி விளையாடுவார்கள் என தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தார் கூறியுள்ளார். இது குறித்து மஜும்தார் மும்பையில் நேற்று கூறியதாவது: இந்திய வீராங்கனைகள் அச்சமின்றி விளையாடுவதை தங்களின் தனித்துவமான பாணியாக கையாண்டு வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அதே வகையான ஆட்டத்தை நமது வீராங்கனைகள் வெளிப்படுத்துவார்கள். அதற்கு எனது முழுமையான ஆதரவு எப்போதும் உண்டு.

அந்த வகையில் ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகியூஸ் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவர்கள் தங்களின் இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்த தொடர் அதற்குத் தயாராக உதவும். இவ்வாறு மஜும்தார் கூறினார்.

The post இந்திய அணி அச்சமின்றி விளையாடும்… appeared first on Dinakaran.

Related Stories: