ஜெய்ஸ்வால், கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 5 ரன், கில் 9 ரன் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 2.5 ஓவரில் 17 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், சூரியகுமார் – திலக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. திலக் 27 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சேஸ் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். அடுத்து வந்த சாம்சன் 13 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய சூரியகுமார் 38 பந்தில் அரை சதம் அடித்தார். இந்தியா 15.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் ஹர்திக் 14 ரன், சூரியகுமார் 61 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அர்ஷ்தீப் (8), குல்தீப் (0) வந்த வேகத்தில் வெளியேறினர். இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4, அகீல் உசேன் 2, ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 18 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து வென்றது. பிரண்டன் கிங் 85 ரன், பூரன் 47 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
The post இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி appeared first on Dinakaran.