ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் மாசடையும் ஏரி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ஏரிக்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால் ஏரி நீர் மாசடைகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ஆந்திர மாநிலம் சுருட்டபள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ஆந்திர எல்லையில் தொடங்கி நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை வழியாக ஊத்துக்கோட்டை ஏரிக்கு செல்கிறது.

ஆனால் இந்த கால்வாய் ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை இந்த கால்வாயில் விடுகின்றனர். இதனால். தற்போது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மட்டுமே ஏரிக்கு செல்கிறது. இதனால் கால்வாயில் துற்நாற்றம் வீசுவதோடு, கழிவுநீர் ஏரியில் கலப்பதால் எரி நீரும் மாசடைகிறது. எனவே கால்வாயில் கழிவு நீர் விடுபவர்கள் மீது சம்மந்தப்பட்ட நீர் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் மாசடையும் ஏரி appeared first on Dinakaran.

Related Stories: