ஐசிசி உலக கோப்பை இங்கிலாந்து அணியில் மீண்டும் ஸ்டோக்ஸ்

லண்டன்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். உலக கோப்பை ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியில், அந்த அணி 2019ல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (32 வயது) சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், கேப்டன் ஜாஸ் பட்லரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். உலக கோப்பைக்கு முன்பாக நியூசிலாந்துடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்டோக்ஸ் களமிறங்க உள்ளார்.

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, சாம் கரன், லயம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.

இங்கிலாந்து டி20 அணி: ஜாஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லயம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோஷ் டங், ஜான் டர்னர், லூக் வுட்.

The post ஐசிசி உலக கோப்பை இங்கிலாந்து அணியில் மீண்டும் ஸ்டோக்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: