ஆளுநர் ரவி டிஸ்மிஸ்?… ஆளுநரை திரும்பப் பெறக்கோரிய வைகோவின் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய ஜனாதிபதி!!

புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநரை நீக்கக் கோரிய 50 லட்சம் தமிழக பிரதிநிதிகளின் கையெழுத்து படிவம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும், தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதையடுத்து , மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு ஜனநாயகத்திற்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 35 சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் மாநிலத்தின் பொதுமக்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட பிரதிகளை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஒப்படைத்தார்.

இந்நிலையில் ஆளுநரை நீக்கக் கோரிய 50 லட்சம் தமிழக பிரதிநிதிகளின் மனு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம் சார்பில் மதிமுகவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.அந்த கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறது? என்பதை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆளுநர் ரவி டிஸ்மிஸ்?… ஆளுநரை திரும்பப் பெறக்கோரிய வைகோவின் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய ஜனாதிபதி!! appeared first on Dinakaran.

Related Stories: