அதில் ஹமாஸ் பயங்கரவாத குழு குறித்து எதுவும் குறிப்பிடப்படாமல் தீவிரவாத தாக்குதலை மட்டும் கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக சீனா, கபோன், மொசாம்பிக், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த தீர்மானத்துக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிராக வாக்களித்தன. அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா, ஸ்விட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால், இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் ரஷ்யா புதியதாக மேலும் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.
The post காசா மருத்துவமனை தாக்கி தகர்க்கப்பட்டதை எப்போதும் மன்னிக்க முடியாது : ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம் கொண்டு வந்தது ரஷ்யா!! appeared first on Dinakaran.
