கந்தர்வகோட்டை பகுதியில் வாழை இலை தட்டுப்பாடு

*பொதுமக்கள் அவதி

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் ஆடி 18ம் பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் வாழை இலை கிடைக்காமல் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இப்பகுதியில் ஆடி மாதம் முழுவதும் கிராம கோயில்களுக்கும், குல தெய்வங்களுக்கும் ஆட்டுகிடா வெட்டி பூஜை செய்து அனைவருக்கும் அன்னதானம் வழங்குவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் நடைபெற்று வருகிறது.

ஆகையால் வாழை இலையின் தேவை அதிக அளவில் உள்ளது. வாழை சாகுபடி என்பது குறைந்த அளவே இப்பகுதியில் உள்ளது. மேலும் வாழை மரங்களை தார்க்கு விடுவதால் இலை அறுப்பு என்பது குறைவாக உள்ளது. ஆடி மாத காற்றில் வாழை இலைகள் மரத்திலேயே கிழிந்து விடுவதால் சாப்பாட்டு இலை அறுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

இதனால் தஞ்சை, திருச்சி, திருக்காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்கப்படும் இலைகள் தடுக்கு ஒன்று 4 ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரையும், நுனி இலை 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இவ்வாறு இருப்பினும் வாழை இலை தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் வரும் ஆவணி மாதம் திருமணம் முகூர்த்த நாள் இருப்பதால் இலை தட்டுப்பாடு இருக்கும் என வியாபாரிகள் கூறுகிறனர்.

The post கந்தர்வகோட்டை பகுதியில் வாழை இலை தட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: