ஊட்டியில் ‘2’ டிகிரி செல்சியசால் உறைபனி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் துவக்கம் முதல் உறை பனி விழத் துவங்கியது. கடந்த 3 நாட்களாக உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி கொட்டியதால், புல்வெளிகளின் மீது வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சியளித்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஊட்டியில் ‘2’ டிகிரி செல்சியசால் உறைபனி appeared first on Dinakaran.

Related Stories: