3வது நாளாக லாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள்: லாரிகளுக்கு லட்சம் ரூபாய் அபராதம்

பல்லடம்: பல்லடம் அருகே மூன்றாவது நாளாக லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர். இதில், அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. அங்கு இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் கிராமங்கள் வழியாக செல்வதால், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும் கனிம வளங்கள் அதிக அளவில் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து 3வது நாளாக ஏழு லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் லாரிகளில் உள்ள அனுமதி சீட்டை சரி பார்த்து சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை எடை மேடைக்கு கொண்டு சென்றனர். அங்கு எடை சரிபார்க்கப்பட்டதில் மூன்று லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக லோடு ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று லாரிகளுக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக அளவில் லோடு ஏற்றிக்கொண்டு கிராமத்தின் சாலைகள் வழியாக மீண்டும் லாரிகள் இயக்கப்பட்டால், சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

The post 3வது நாளாக லாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள்: லாரிகளுக்கு லட்சம் ரூபாய் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: