தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு அணிகள் மோத உள்ள முதல் டி20 போட்டி வரும் 10ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

இந்த தொடர் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அங்கே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் உள்ளிட்டவர்கள், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணி வீரர்கள் சென்றனர். டெஸ்ட் அணி வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! appeared first on Dinakaran.

Related Stories: