துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 112 ரன் (3 சிக்சர், 15 பவுண்டரி) குவித்தார். டி20 போட்டிகளில், இந்திய வீராங்கனைகளில் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. 20 ஓவர் முடிவில் இந்தியா 210 ரன் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து, 14.5 ஓவரில் 113 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், இந்தியா 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
The post இங்கிலாந்துடன் முதல் டி20 இந்தியா அபார வெற்றி: மந்தனா சாதனை சதம் appeared first on Dinakaran.
