16 போட்டிகளில் தோல்வி: ஜோ ரூட் சாதனை

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இப்போட்டியில் ஆடியுள்ள இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், அவர் கடைசியாக வெளிநாடுகளில் ஆடிய 16 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற முடியாமல் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் ஆடியவற்றில் 14 போட்டிகளில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. தவிர, 2 போட்டிகள் டிராவில் முடிந்தன.

இதற்கு முன், வெளிநாடுகளில் ஆடி அதிக போட்டிகளில் வெற்றி பெற முடியாத வீரராக, இந்திய அணி முன்னாள் வீரர் கபில் தேவ் திகழ்ந்தார். அவர் இந்திய அணிக்காக ஆடிய சமயம், தொடர்ச்சியாக 15 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Related Stories: