சில்லி பாயின்ட்…

* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நாளை தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.

* பர்மிங்காம் பியர்ஸ் அணியுடனான டி20 பிளேஸ்ட் போட்டியில், நாட்டிங்காம்ஷயர் வேகப் பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். எனினும், இப்போட்டியில் பர்மிங்காம் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. நாட்டிங்காம்ஷயர் 20 ஓவரில் 168 ரன் ஆல் அவுட். பர்மிங்காம் பியர்ஸ் 19.1 ஓவரில் 172/8.

* இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில், 4வது நாளான நேற்று உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்திருந்தது. முதல் இன்னிங்சில் கூடுதலாகப் பெற்ற 91 ரன்னுடன் சேர்த்து ஆஸி. மிக வலுவான முன்னிலை பெற்றுள்ளதால் இங்கிலாந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: