செல்வப்பெருந்தகை கிண்டல் அமெரிக்காவின் அதிபராக அண்ணாமலை முயற்சி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அரசியல் கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் வெறுப்பு, அவதூறுகளை பரப்பி வருகிறார். அவர் அநாகரிகமாக அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நான் சவால் விடுகிறேன். இந்து மகாசபை முதல் பாஜ வரை அண்ணாமலை பேசட்டும், நான் காங்கிரஸ் பற்றி பேசுகிறேன். என்னுடன், அண்ணாமலை விவாதத்திற்கு வரட்டும். நான் அதிமுகவில் இருந்தோ, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விட்டோ காங்கிரஸ் கட்சிக்கு வரவில்லை. தலித் இயக்கங்களில் பணியாற்றி காங்கிரஸ் இயக்கத்திற்கு வந்தேன். அண்ணாமலை லண்டனுக்கு சென்று, உலக அரசியலை கற்றுக் கொண்டு, அமெரிக்க அதிபர் ஆவதற்கு முயற்சி செய்கிறார் போல. வாழ்த்துகள். மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி அன்று, தமிழகத்தில் வெறுப்பு அரசியலை அகற்றுவதற்கும், அன்பை விதைப்பதற்கும், சாதி, மத மோதல்களை தடுப்பதற்கும், மதவாத சக்திகளை அடக்குவதற்கும், நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, காங்கிரஸ் மாநில துணை தலைவர் கோபண்ணா, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, காண்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post செல்வப்பெருந்தகை கிண்டல் அமெரிக்காவின் அதிபராக அண்ணாமலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: