டெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய குழு சந்திக்கிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க உள்ளனர். மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.