இந்நிலையில் சாந்தி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாஜ மாவட்ட தலைவர் பரமேஸ்வரியும், அவரது கணவர் ஆனந்தராஜிம் சேர்ந்து எங்களை கொலை செய்து விடுவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே நள்ளிரவில் வீட்டிற்கு அடையாளம் தெரியாத ஆட்களை காரில் அனுப்பி எனது கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முயற்சித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். பாஜமாவட்ட தலைவரே, பாஜவைச் சேர்ந்த இளைஞரணி மாவட்ட நிர்வாகி மற்றும் அவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவால், அரியலூர் மாவட்ட பாஜவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பாஜ மாவட்ட தலைவர் பரமேஸ்வரி சார்பாக பாஜ வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்கள் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில், இளைஞர்அணி செயலாளர் கண்ணன் மீது புகார் மனு கொடுத்துள்ளனர்.
The post பாஜ நிர்வாகியின் குடும்பத்தை மாவட்ட தலைவர் கொல்ல முயற்சி; போலீசில் மனைவி பரபரப்பு புகார் appeared first on Dinakaran.
