சென்னை : மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க ஈபிஎஸ் அறிக்கை விடுகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். 100நாள் வேலைத்திட்டம் தொடர்பான EPS அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின விமர்சனம் செய்துள்ளார். அதில், “நாம் தட்டி எழுப்பியபின் துயில் கலைந்த EPS,100 நாள் திட்ட மாற்றத்தை கைவிடக்கோரி அறிக்கை. 100 நாள் திட்டம் தொடர்பாக பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் தனது ஸ்டைலில் EPS அழுத்தம்,”இவ்வாறு தெரிவித்தார்.
