டைனோசர்கள் போல காங். அழிந்து போகும்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

லக்கீம்பூர் கேரி: காங்கிரஸ் செல்லும் வழியை பார்த்தால் டைனோசர்கள் போல அழிந்து போகும் என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கேரியில் பாஜ வேட்பாளர்கள் அஜய் குமார் மிஸ்ரா(கேரி) மற்றும் ரேகா வர்மா (தவ்ராஹா) ஆகியோரை ஆதரித்து ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரித்தார். பிரசார கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங்,‘‘கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றபின், நாடு பாதுகாப்பு, உள்நாட்டு கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் முன்னேற்றமடைந்துள்ளது. சமாஜ்வாதியும் காங்கிரஸ் கட்சியும் கடந்த கால விஷயங்களாக மாறும். காங்கிரஸ் கட்சி சென்றுகொண்டுள்ள வழியை பார்த்தால் அது டைனோசர்கள் போல அழிந்து போகும். குடும்ப தலைவர் இறப்புக்கு பிறகு எந்த ஒரு இந்தியரும் பூர்வீக சொத்தை பிரித்துக்கொள்ள வரி வசூலிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பாஜ தான் வாக்குறுதி அளித்தபடி செயல்படும் ஒரே கட்சியாகும்” என்றார்.

The post டைனோசர்கள் போல காங். அழிந்து போகும்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: