தொண்டை கரகரப்புடன் தொடங்கும் புதிய காய்ச்சல்; ஒரே மாதத்தில் 610 பேருக்கு டெங்கு: பொதுமக்கள் அச்சம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 610 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் 4,454 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 610 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சராசரியாக 300 பேருக்கு டெங்கு இருந்த நிலையில் திடீரென டெங்கு பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 535ஆக இருந்த டெங்கு பாதிப்பு செப்டம்பரில் 610ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 230 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெயிலும், மழையும் மாறி மாறி ஏற்படுவதால் கொசுப்புழு உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தொண்டை காரகரப்புடன் தொடங்கி இருமல் அதிகரித்து ஒரு வாரம் வரை காய்ச்சல் நீடிப்பதால் சென்னையில் ஏராளமானோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த வகை காய்ச்சல் பல நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நீடிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மொத்தம் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட சுகாதார மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. பல்வேறு அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கொசு ஒழிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரவீந்திரநாத் குற்றம் சாட்டினார்.

கொசு ஒழிப்பு பணியில் உள்ள தற்காலிக பணியாளர்களை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக ரவீந்திரநாத் புகார் தெரிவித்தார். தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள், மருத்துவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் மெத்தனம் நிலவுகிறது. திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் பயிற்சி பெண் மருத்துவர் இறந்தது வேதனை அளிக்கிறது எனவும் கூறினார்.

The post தொண்டை கரகரப்புடன் தொடங்கும் புதிய காய்ச்சல்; ஒரே மாதத்தில் 610 பேருக்கு டெங்கு: பொதுமக்கள் அச்சம்! appeared first on Dinakaran.

Related Stories: