டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள மாநிலம் சார்பில் நடைபெற உள்ள போராட்டத்தில் விசிக பங்கேற்கும்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள மாநிலம் சார்பில் நடைபெற உள்ள போராட்டத்தில் விசிக பங்கேற்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நடுத்தெருவில் இந்திய சனநாயகம்; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பை பாதுகாத்திடுவோம்’ என்னும் தலைப்பில் நாளை கேரள மாநிலத்தின் சார்பாக புதுதில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பங்கேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75ஆண்டுகளானதை முன்னிட்டு கர்நாடக அரசால் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் பெங்களூரில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் ‘அரசமைப்புச் சட்டமும் இந்திய ஒற்றுமையும்’ என்னும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். சமூக பொருளாதாரம், அரசியல், பண்பாடு,சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்படுகிறது. இம்மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பங்கேற்கிறேன் என திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

The post டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள மாநிலம் சார்பில் நடைபெற உள்ள போராட்டத்தில் விசிக பங்கேற்கும்: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: