கர்நாடகாவை இந்தியாவில் இருந்து பிரிக்க காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நஞ்சன்கூடு: இந்தியாவில் இருந்து கர்நாடகாவை பிரிக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையில் குற்றம்சாட்டினார். ஹூப்பள்ளியில் பிரசாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ‘ கர்நாடகாவின் வளர்ச்சிக்கு, இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டுக்கு மிரட்டல் விடுக்க காங்கிரஸ் யாரையும் அனுமதிக்காது என்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று நஞ்சன்கூடு பேரணியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது, ‘இந்தியாவில் இருந்து கர்நாடகாவை பிரிப்பதற்கு காங்கிரஸ் வெளிப்படையாக வக்காலத்து வாங்குகிறது. நாட்டை துண்டாடும் தேச விரோத சக்தி கும்பல் காங்கிரசின் உயர்மட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக இவர்கள் செயல்படுகிறார்கள். என் மன வலியை இங்கு பதிவு செய்கிறேன். இது போன்ற விளையாட்டை இந்த நாடு மன்னிக்காது. வெளிநாட்டு சக்திகளை நமது நாட்டில் தலையிட ஒரு குடும்ப அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்திய இறையாண்மையை அவமதிக்கும் வகையில் வெளிநாட்டு அதிகாரிகளை ரகசியமாக இவர்கள் சந்திக்கிறார்கள். இதற்காக அவர்கள் வெட்கப்படுவதில்லை.

காங்கிரஸ் கட்சியினர் மாநிலங்களுக்கு இடையே மத தீமூட்டுகிறார்கள். இப்படி அவர்கள் செய்யும் போது இந்திய மக்கள் ஒன்றுபட்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும். மைசூருவில் எனது பிரசாரத்தை முடித்துக்கொள்கிறேன். இனி நீங்கள் பேட்டிங்கை தொடங்கலாம். மே 10ம் தேதி உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post கர்நாடகாவை இந்தியாவில் இருந்து பிரிக்க காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: