இந்த ஒப்பனை அறையில் கழிவறை, சானிடரி நாப்கின்கள், உடை மற்றும் சிறு அறை, தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கான தனி அறை ஆகியவை அடங்கியுள்ளது. சுமார் 4.37 கோடி செலவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு ஒப்பனை அறையின் மதிப்பு ரூ. 29 .13 லட்சம் ஆகும். இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் செய்தி பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “.சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள #SheToilet எனும் இந்தப் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு! அதனை உறுதிசெய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,”எனத் தெரிவித்துள்ளார்.
The post SheToilet எனும் இந்தப் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
