சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தம் வேண்டும்; ஜி.கே.வாசன்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு புதிதாக வந்தே பாரத் ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது. இது மகிழ்ச்சியளிக்கிறது. வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தின் 2வது பெரிய நகரமாக கோவில்பட்டி திகழ்கிறது. கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள தென்காசி, சங்கரன்கோவில், திருவேங்கடம், ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது.

இந்த ரயில் நிலையம் ஆண்டுக்கு சுமார் 30 கோடி வரை வருமானம் ஈட்டிதந்து “ஏ” கிரேடு அந்தஸ்தில் உள்ளது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளையும், வணிக போக்குவரத்து மையமாகவும் திகழும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தற்பொழுது இயக்க இருக்கின்ற வந்தே பாரத் ரயில், நின்று செல்ல உரிய நடவடிக்கையை ஒன்றிய அரசும், ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும்.

The post சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தம் வேண்டும்; ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Related Stories: