சீர்காழியில் சுற்றித்திரிந்த 80 பன்றிகள் பிடிப்பு

 

சீர்காழி, நவ.6: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் வியாபாரிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். இதேபோல் பன்றிகள் திடீரென்று சாலைகளில் குறுக்கே சென்று விடுவதால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வந்தன சில சமயங்களில் உயிரிழப்புகளும் நடந்து மேலும் பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது பன்றிகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன மேலும் சீர்காழி நகராட்சி அலுவலகத்திலும் பொது மக்கள் பன்றிகளை பிடிக்க வலியுறுத்தி புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையர் ஹேமலதா நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆலோசனை பேரில் பன்றி பிடிக்க பயிற்சி பெற்றவர்கள் வரவழைக்கப்பட்டு நகராட்சி சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர் ராஜ், பணி மேற்பார்வையாளர் கலியபெருமாள், இளநிலை உதவியாளர் பாபு, பரப்புரையாளர்கள் அலெக்சாண்டர் தமிழ்மணி நித்தியானந்தம் மற்றும் ஊழியர்கள் இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் 80 பன்றிகளை பிடித்தனர். அந்த பன்றிகள் வேன் மூலம் ஏற்றி வெளியூருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. பன்றிகள் பிடிக்கப்பட்டதால் விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் மற்றும் காவல்துறைனர் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்

 

The post சீர்காழியில் சுற்றித்திரிந்த 80 பன்றிகள் பிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: